பண்டாரநாயக்கவின் கொள்கைகளுக்கு அமைய கூட்டு எதிர்க்கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வீரவில பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஹோகந்தர பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது சாதாரண மனிதர்கள் என்ற வகையில் ஆளும் தரப்பினருக்கும் பிக்குமாருக்கும் கட்டளை சட்டங்களை கொண்டு வர முடியாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.