கெத்து வரி விலக்கு வழக்கில் அதிரடி உத்தரவு

336

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இந்த பொங்கலுக்கு கெத்து படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வில்லை.

இதற்கு காரணம் தெரிவிக்கையில் கெத்து என்பது தமிழ் சொல் இல்லை என கூறினர். ஆனால், கெத்து என்பது தமிழ் சொல் தான் என உதயநிதி ஆதாரத்துடன் நிரூபித்தார். அதோடு, இதற்காக வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘திருப்புகழிலேயே ‘கெத்து’ என்ற வார்த்தை இருப்பதை தமிழ் பாடல்கள் மூலம் அறிகிறேன். எனவே, அந்த வார்த்தை அகராதியில் இல்லை என்பதை அரசு தரப்பு நிரூபித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

SHARE