
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நைரோபியில் உள்ள மிகப்பெரிய திறந்தவெளி சந்தையில் ஒன்றான கிகொம்பாவில் ஏற்பட்ட இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. சிலரது உடல் தீயில் எரிக்கப்பட்டும், சிலர் தீ பிழம்பில் இருந்து வந்த விஷவாயுவினை சுவாசித்தும் உயிரிழுந்துள்ளனர். இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.