தமிழ் சினிமாவில் விஜய்க்கு எப்படி மாஸ் இருக்கிறதோ அதுபோல தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு இருக்கிறார். அவரின் படங்கள் என்றாலும் அங்கே திருவிழா தான்.
அவர் தன்னுடைய 25 படமான மகரிஷி படத்தில் அவர் பிசியாக இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடிக்கிறார். நேற்று ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ஷூட்டிங் நடத்தப்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முன் கூட்டியே படக்குழு அங்கு சென்று ஆயத்தமானது.
காலை 7.30 மணியளவில் மகேஷ் பாபுவும் இடத்திற்கு வந்துவிட்டார். ஆனால் விமானத்துறை அதிகாரிகளிடமிருந்து அனுமதி குறித்த முறையான அறிவிப்புகள் வரவில்லை.
இதனால் படக்குழு தீவிரமான எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் விமானத்துறை ஆணையத்திற்கு விமானத்தை கடத்த போவதாக மிரட்டல் வந்துள்ளது தெரியவந்தது. இதனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டு மகேஷ் பாபு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.