கேப்பாப்புலவு இராணுவ முகாம் இரவிரவாக மக்களால் முற்றுகை வன்னி எம்.பி.சி.சிவமோகன் தகவல்.

320

 

காணிகளை விடுவித்து தருவதாக அரச அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என்ற அறிவித்தலுக்கிணங்க மக்கள் நேற்று இராணுவ முகாமை சுற்றியுள்ள பிரதேசத்தில் கூடினர். பின்னர் காணிகளை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததால் மக்களிடையே பாரிய குழப்பம் ஏற்பட்டது. நேற்று மாலை வரை தொடர்ந்த குழப்பநிலை இரவிரவாக மக்கள் பனியையும் பொறுப்பெடுக்காது போராட்டத்தை நிகழ்த்தினர்.
இது பற்றி வன்னி எம்.பி.சி.சிவமோகன் தெரிவிக்கையில் மக்களின் வாழ்வியல் பிரதேசங்களை விட்டு இராணுவம் உடன் வெளியேறுவது அவசியமாகிறது. முல்லை மாவட்டத்தில் கேப்பாப்புலவு கிராமம், வட்டுவாகல் பிரதேசத்தில் கிழக்கு முள்ளிவாய்க்கால் கிராமம், புதுக்கடியிருப்பு மக்களின் வாழ்விடங்கள், கொக்குளாய் பிரதேச மக்களின் வாழ்விடங்கள், நாயாறு கிராம மக்களின் பிரதேசம் என பெருந்தொகையினரின் காணிகளை தொடர்ந்தும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பொருத்தமற்ற காரணங்களை முன் வைப்பதை விடுத்து மக்களின் வாழ்வியல் பிரதேசங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும். அல்லாதவிடத்து பாரிய போராட்டங்களை முல்லை மாவட்டத்தில் அரசு எதிர் நோக்க நேரிடும்.
SHARE