பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், அது மிக சுலபமாக ஏனைய பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் இருந்துவரும் செயல்முறைகளே இங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயல்முறை என்பது அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கால அவகாசம் வழங்குகிறது. இதனால் உங்களின் தகுதி குறித்த மதிப்பீடுகளை தயார் படுத்தவும் உதவுகிறது.
1. பாடநெறி
பல ஆண்டுகள் மிக உயரிய நிலையில் இங்கு நீங்கள் பாடங்களை கற்றுக்கொள்ள இருக்கின்றீர்கள். ஆதலால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடநெறியை தெரிவு செய்து கற்றலை உற்சாகத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
2. கல்லூரி
விருப்பமான பாடத்தை தெரிவு செய்வது போன்றே விருப்ப கல்லூரியும். உங்கள் விண்ணப்பத்தில் இதுசார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும், அதில் நீங்கள் தெரிவு செய்யலாம்.
3. விண்ணப்பித்தல்
உங்களது UCAS விண்ணப்பத்தை அக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக குறிப்பிட்ட அலுவலகங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். எங்கள் நிறுவன குறியீடு CAM C05 என்பதாகும்.
உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த சில தினங்களில் மின்-அஞ்சல் வாயிலாக உங்களிடம் சில கேள்விகள் முன்வைக்கப்படும். இந்த கேள்விகளின் பதில்களை அக்டோபர் 22 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
4. மதிப்பீடு
நேர்காணலுக்கு முன்னதாகவோ அல்லது நேர்காணலின் போதோ பெரும்பாலான விண்ணப்பதாரர்களிடம் இருந்து உங்களின் தகுதி குறித்த எழுதி முடிக்கப்பட்ட மதிப்பீடு ஒன்று கோரப்படும்.
5. நேர்காணல்
விண்ணப்பதாரர்களிடம் இருந்து பொருத்தமானவர்களை தெரிவு செய்து அவர்களை நேர்கணலுக்கு அழைப்பு விடுக்கப்படும். இது ஆண்டு தோறும் ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் 80 சதவிகிதத்தினர்.
6. தீர்மானித்தல்
உங்கள் விண்ணப்பம் குறித்த எங்கள் மதிப்பீடுகளின் முடிவு ஜனவரி மாத இறுதிக்குள் தெரிவிக்கப்படும்.