கேரளா இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்! நடந்தது என்ன

199

அண்மையில் கேரளாவை மட்டுமல்ல உலக மக்கள் பலரையும் திரும்பிபார்க்க வைத்த கொலை சம்பவம் ஆதிவாசி இளைஞர் மதுவின் மரணம் தான். இது பலருக்கும் பேரதிர்ச்சி.

அரிசி திருடினார் என்ற சந்தேகத்தின் காரணமாக மக்கள் அவரை கட்டிவைத்து அடித்து கொன்றிருக்கிறார்கள். இதற்கு கேரள முதல்வர் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்முட்டி மதுவை ஆதிவாசி என சொல்லாதீர்கள். அவன் என் இளைய சகோதரன் என்று நான் சொல்வேன். எல்லோரும் சேர்ந்து கும்பலாக கொன்றுவிட்டீர்கள்.

பசிக்காக திருடியவனை திருடன் என சொல்லமுடியாது. அவனும் இந்த சமூகத்தில் வாழவேண்டியவன். அவனுக்கு உரிமைகள் இருக்கிறது. எங்களை மன்னித்து விடு மது என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

SHARE