கேரள அரசாங்கம் அரச பாடசாலை கல்வியில் காட்டும் சிரத்தையை பாராட்டியுள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார

186

கேரள அரசாங்கம் அரச பாடசாலை கல்வியில் காட்டும் சிரத்தையை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார பாராட்டியுள்ளார்.

கேரளாவில் உள்ள உயர் பள்ளி ஒனறுக்கு நேற்று இலங்கையின் அமைச்சர் சந்ராணி பண்டார விஜயம் செய்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது திடீர் விஜயமாக இருந்ததாகவும், பள்ளியின் மீள்திறப்பு நிகழ்வின்போதே இலங்கையின் பெண் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டார அங்கு சமூகமளித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன்போது கருத்து வெளியிட்டபோதே கேரள அரசாங்கம் அரச பாடசாலை கல்வியில் காட்டும் சிரத்தையை இலங்கை அமைச்சர் பாராட்டியதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE