கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

103

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர்  கேரள கஞ்சா பொதியுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்து காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும்   நேற்று சந்தேகத்திற்கு இடமாக படகொன்றில் பொதிகளை ஏற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்று அவர்களை கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதாகிய இருவரிடமிருந்த சுமார் 150 கிலோக்கும் அதிகமாக கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்கள்  மாதகல் பகுதியை சேர்ந்தவர்கன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதாகிய சந்தேக நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா குறித்து காங்கேசந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE