கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அபுதாபி தலைமையகத்தில் உள்ள விபிஎஸ் சுகாதார பராமரிப்பு அலுவலகத்தின் தலைவரான கேரளாவைச் சேர்ந்த ஷாம்ஷீர் வயாலில் 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஷாம்ஷீர் வயாலில் அபுதாபி தலைமையகத்திலுள்ள சுகாதார பராமரிப்பு அலுவலகத்தின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் இவர் வெள்ளத்தால் முற்றிலும் மாறிப் போயுள்ள கேரளாவிற்காக 50 கோடி ரூபாய் நிதியுதவியாக கொடுத்துள்ளார்.
இதன் மூலம் அவர் கேரளாவில் இருக்கும் மூன்று முக்கிய பிரச்சனைகளை தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இந்த கனமழை காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
அதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு கட்டித் தருவது, மருத்துவமனைகள் சீரமைத்து தருவது மற்றும் படிப்பு போன்றவைகளுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் கன மழை காரணமாக தற்போது கேரளா மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது.
இதனால் மாநிலத்திற்கு 50 கோடி ரூபாய் நிதியுதவி கொடுக்க முன்வந்துள்ளதாகவும், இவை வீடு கட்டித் தருவது, மருத்துவமனைகள் மற்றும் மாணவர்களின் படிப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இதற்கான பணிகள் சென்று கொண்டிருப்பதாகவும், அவை அனைத்தும் அறிந்த பின்பு வேலைகள் உடனடியாக துவங்கப்படும் என்று கூறியுள்ளார்.
கேரள மக்களுக்கு ஒரு தனிநபர் வழங்கிய அதிகப்பட்ச தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.