கே.எல்.ராகுலுக்கு பதிலடியாக 140 ரன் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர்

152

 

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான டீன் எல்கர் 140 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.

ராகுல் 8வது சதம்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனின் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது.

தனது முதல் இன்னிங்க்சை ஆடிய இந்திய அணி 245 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கே.எல்.ராகுல் 101 (137) ஓட்டங்கள் எடுத்தார். ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகளும், பர்கர் 3 விக்கெட்டுகளும், ஜென்சென் மற்றும் கோட்ஸி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் எய்டன் மார்க்ரம் 5 ஓட்டங்களில் சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தார்.

எல்கர் 140
ஆனால் தொடக்க வீரர் டீன் எல்கர் (Dean Elgar) மட்டும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இது அவரது 14வது சதம் ஆகும்.

இந்த மைதானத்தில் முதல் சதம் ஆகும். அதேபோல் தனது அறிமுக போட்டியில் அரைசதம் விளாசிய டேவிட் பெடிங்கம் (David Bedingham) 56 ஓட்டங்களில் சிராஜ் ஓவரில் அவுட் ஆனார்.

மழை குறுக்கிட்டதால் முன்னதாகவே இரண்டாம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

எல்கர் 140 ஓட்டங்களுடனும் ( 23 பவுண்டரிகள்), ஜென்சென் 3 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். பும்ரா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

SHARE