இலங்கை அரசியலிலும் அரசியல் யாப்பிலும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி முன்னுக்குப் பின் முறனான கருத்துக்களுக்கு மத்தியில், முன்னாள் விடுதலைப் புலிகள் அல்லது தமிழ் அரசியல் கைதிகளின் நிலைப்பாடும், அவர்களது விடுதலை சாத்தியமா? போன்ற வினாக்கள் இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகள் மீது மட்டும் சட்டமா அதிபர் திணைக்களம் பலிவாங்கலில் ஈடுபடுகின்றதா? குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பாசம் காட்டும் ஜனாதிபதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் இருக்கும் அரசியல்கைதிகள் மீது ஏன் காட்டவில்லை? போன்ற பல வினாக்களுக்கு இலங்கையின் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா அரசியற்களம் வட்டமேசையில் பதிலளித்துள்ளார்.