கைகலப்பில் கடற்படை அதிகாரி உட்பட இருவர் குத்திக் கொலை.

551

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் இருவர் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். கடற்படை தொழிற்சாலையின் பொறியியலாளர் என்று கூறப்படுகின்ற ஒருவரும் மற்றுமொருவருமே இவ்வாறு குத்திக்கொலைச் செய்யப்பட்டுளள்னர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரிவு அறிவித்துள்ளது.

23 மற்றும் 31 வயதுடைய இரண்டு பேரே உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலம் சூரியவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட குரோதமே இந்த மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மீகரபுற பிரதேச தபால் நிலையத்தின் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்தவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறிய போது முச்சக்கர வண்டியில் இருந்து எடுக்கபட்ட ஆயுதங்களால் தாக்கபட்டு உள்ளார்கள்.

சம்பவம் நடைபெற்ற பொது அப்பகுதியில் சென்று கொண்டிருந்த கடற்படை அதிகாரி இவர்களால் தாக்கபட்டே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

SHARE