கைகள் கருப்பாக உள்ளதா? இதோ டிப்ஸ்

399

முகம் ஒரு நிறமாகவும், மற்ற பாகங்கள் ஒரு நிறமாகவும் இருந்தால் முழுமையான அழகை பெற இயலாது.

அதிலும், கழுத்து மற்றும் கைகள் சிலருக்கு கருப்பாக இருக்கும். அப்படி கைகள் கருப்பாக இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தி கையின் நிறத்தை மாற்றிகொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை தோல் நீக்கி,ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனை கைகளில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். இது இயற்கையான ப்ளீச் வாரத்திற்கு ஒரு முறை என நான்கு வாரங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரி

வெள்ளரியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் மூன்று டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து கைகளில் பூசுங்கள்.

சர்க்கரை

இது மிகவும் எளிதானது. கைகளில் ஒரு கைப்பிடியளவை விட குறைந்த அளவு சர்க்கரையை எடுத்துக் கொண்டு கைகளில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம். இது ஸ்க்ரப் ஆக செயல்படும்.

SHARE