இன்று உலக பெண்கள் தினம். இந்த நாளில் தமிழ் இனத்திற்காக போராடிய ஒரு பெண் போராளியின் கதை இது.
தமிழ் இனப் பெண்களின் நிலையையும் முன்னாள் பெண் போராளிகளின் இன்றைய நிலையையும் எடுத்துரைக்க தாயகத்தில் உள்ள பல ஆயிரம் பேரில் ஒருவரது கதையே இது. நாட்டுக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று பல்வேறு சவால்களின் மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வாறான பல ஆயிரம் போராளிகளில் வனிதாவும் ஒருவர். மக்களின் உரிமைக்கான கனவுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார் வனிதா. இறுதிவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த வனிதாவின் இரண்டு கைகளும் இறுதியுத்தத்தின்போது பறிபோயின. சனங்களுக்காக ஆயுதம் ஏந்திய கைகள் பறிபோக எதுவுமற்று , சரணடைந்த சனங்களுடன் வனிதாவும் சரணடைந்தாள்.
இன்று உலக பெண்கள் தினம். இந்த நாளில் தமிழ் இனத்திற்காக போராடிய ஒரு பெண் போராளியின் கதை இது. தமிழ் இனப் பெண்களின் நிலையையும் முன்னாள் பெண் போராளிகளின் இன்றைய நிலையையும் எடுத்துரைக்க தாயகத்தில் உள்ள பல ஆயிரம் பேரில் ஒருவரது கதையே இது. நாட்டுக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று பல்வேறு சவால்களின் மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வாறான பல ஆயிரம் போராளிகளில் வனிதாவும் ஒருவர். மக்களின் உரிமைக்கான கனவுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார் வனிதா. இறுதிவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த வனிதாவின் இரண்டு கைகளும் இறுதியுத்தத்தின்போது பறிபோயின.
சனங்களுக்காக ஆயுதம் ஏந்திய கைகள் பறிபோக எதுவுமற்று , சரணடைந்த சனங்களுடன் வனிதாவும் சரணடைந்தாள்.
பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலும் பம்பைமடு தடுப்பு முகாமிலும் தடுத்துவைக்கப்பட்ட வனிதாவை புலனாய்வுப் பிரிவினர் 2010இல் கொழும்புக்குக் கொண்டுசென்று பூசா சிறையில் அடைத்தனர்.
2011இல் விடுவிக்கப்பட்ட வனிதா தற்போது அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். புத்தளம் உடப்பை சேர்ந்த வனிதா தற்போது முல்லைத்தீவு கேப்பாபுலவில் உறவினர் ஒருவரது தயவில்தான் வாழ்கிறார்.
இவரது வாழ்வை முன்னெடுக்கவும் மேம்படுத்தவும் உரிய உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே வனிதா வாழ்கிறார். சுயதொழில்களில் ஈடுபடும் உதவித்திடங்களை வழங்கினால் தன்னால் முன்னேற இயலும் என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.
அத்துடன் தனி ஆளாக வாழும் வனிதாவுக்கு, தமிழ் மக்களின் உரிமைக்காக போராட புறப்பட்ட வனிதாவுக்கு இப்போது எதுவும் இல்லை. தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டு நம்பிக்கை தளராது வாழும் வனிதா போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் முன்னாள் போராளிகளிகளும் நம்பிக்கை அளிப்பவர்.
இரண்டு கைகளுமற்ற வனிதா எல்லாவற்றையும் கடந்தாள். தடுப்பு முகாங்களும் சிறைகளுமாய் அலைந்த வனிதாவை இரண்டு கைகளுமற்ற அவளின் நிலை குறித்துக் கூட கருணை செலுத்தவில்லை. ஆனாலும் கைகளற்றபோதும் நம்பிக்கையோடு அவைகளைக் கடந்தாள்.
போருக்குப் பிறகு அவள் அனுபவித்த வதைகள்தான் வாட்டின. ஆனாலும் எல்லாவற்றையும் நம்பிக்கையோடு கடந்தாள். வாழும் கனவுடன் மீண்டாள்.
எல்லாவற்றையும் இழந்து, வெறுமையோடிருக்கிறார் வனிதா. கைகள் மாத்திரம்தான் இல்லை என புன்னகைக்கும் வனிதாவிடம் இருக்கும் நம்பிக்கைதான் மீண்டும் துளிர்க்கும் இந்த நிலத்தின் நம்பிக்கையாகும்.
இன்றைய நாளில் பெண்களின் உரிமைக்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் சிந்திப்பதற்கும் நம்பிக்கையை பெறுவதற்கும் வனிதாவின் வாழ்வு சிறந்ததொரு எட்டுத்துக்காட்டு.