கைதாகும் நடிகை நமீதாவின் கணவர்? 41 லட்சம் மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை

131

தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் நமீதா. எங்கள் அண்ணா, பில்லா, ஜகன்மோகினி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து உள்ளார். பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் அதற்கு பிறகு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் நமீதா தற்போது பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

மோசடி வழக்கில் சிக்கிய கணவர்
தற்போது நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மோசடி வழக்கில் சிக்கி இருக்கிறார். அவர் MSME ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் தமிழ்நாடு தலைவராக இருக்கிறார்.

அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் தன்னிடம் 41 லட்சம் ருபாய் வாங்கி ஏமாற்றிவிட்டதாக சேலம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் புகார் அளித்து இருக்கிறார்ர்.

அந்த வழக்கில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும் படி நமிதாவின் கணவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது வரை ஆஜராகவில்லை என்பதால் அவரை போலீசார் கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

SHARE