கைதி தற்கொலையை அடுத்து கட்டாயப்படுத்தப்பட்டுள்ள திடீர் நடவடிக்கை!

230

358_1441251373_11973493_914162882004632_1240341723_o

பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை குறித்த இடைவெளிகளில் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் கட்டாயப்படுத்தப்படவுள்ளன.

சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக்கை கட்டாயப்படுத்துள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன,

பொலிஸ் காவலில் உள்ள கைதிகள் அரை மணித்தியாலங்களுக்கு ஒருமுறை கண்காணிக்கப்படும் நடவடிக்கை இடம்பெற்றிருக்குமாக இருந்தால் புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் மரணம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE