
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் எட்டு பேரில் ஆறு பேரின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இதனை நீதவானிடம் தெரிவித்துள்ளனர். சிறுநீரக மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்தியர்களிடம் இவ்வாறு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களில் ஆறு இந்தியர்களது சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை மையமாகக் கொண்டு இந்திய சிறுநீரக வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.