கைவிடப்பட்ட நிலையில் தபால் திணைக்களத்தின் பெறுமதியான வாகனங்கள்!

583

vehicle1

தபால் திணைக்களத்துக்கு சொந்தமான பெறுமதியான ஆறு வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன

இலங்கை தபால் திணைக்கள ஊழியர் சங்கம் நேற்று இது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்துள்ளது.

தற்போதைய நிலையில் குறித்த ஆறு வாகனங்களும் தபால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கைவிடப்பட்ட நிலையில் சேதமடையத் தொடங்கியுள்ளன. இவற்றின் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனங்களின் பெறுமதியான உதிரிப்பாகங்களை பல்வேறு நபர்கள் திருட்டுத்தனமாக எடுத்துச் சென்றுள்ள நிலையில் அந்த வாகனங்களை மீளப்பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவில் விரயமாக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இந்த வாகனங்களுக்குப் பதிலாக வேறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அதற்கும் அரசாங்க நிதி செலவிடப்படவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

SHARE