கைவிட்டுப்போன சந்தனக் கடத்தல்!

306

 

60கிலோ 300கிராம் நிறையுடைய சந்தன மரத்துண்டுகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட  சந்தன மரத்துண்டுகள் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அனுப்பி வைக்கப்பட இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம்  இன்று மதியம்  இடம்பெற்றுள்ளது.

இந்த சந்தன மரத்துண்டுகளின் பெறுமதி மூன்று லட்சம் எனக் கூறப்படுகிறது.

கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த நபரொருவர் குறித்த சந்தன மரத்துண்டுகளை பொட்டலங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE