
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
நேற்றிரவு 9.10அளவில் பிரதமர் உள்ளிட்டப் பிரதிநிதிகள் சீனாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளனர்.
பிரதமருடன் 17 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் சீனாவிற்கு செல்கின்றார்.
பிரதமர், சீனாவின் கைத்தொழில் வலயங்களுக்கு சென்று அவற்றை நேரில் பார்வையிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.