கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

174

வெலிமட, பொரலந்தை பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்தில் தனியார் மற்றும் இ.போ.ச  பஸ் பணியாளர்களிடையே இடம்பெற்ற கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பஸ் போக்குவரத்து நேர அட்டவணை சம்பந்தமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெலிமட -கெப்பெடிபொலவிலிருந்து பொரலந்தையை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூடன் கெப்பெட்டிபோல டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச பஸ் பணியாளர்களிடையே இடம்பெற்ற கை கலப்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெலிமட குருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான  தனியார் பஸ் உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் தனியா பஸ் நடத்துனர் காயங்களுடன் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பத்தில் இ.போ.ச. பஸ் சேவையில் பணியாற்றிய இரு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இ.போ.ச.பஸ் சேவையில் பணியாற்றி இருவர் பொலிஸ் பாதுகாப்பில் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

SHARE