கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29வது வணக்க நிகழ்வு

246
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியிலும், இரால்வளர்ப்பு பண்ணையிலும், கடந்த 1987ஆம் ஆண்டு ஐனவரி 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவு கூறும் 29ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நடைபெற உள்ளது.

குறித்த நிகழ்வு ஜனவரி மாதம் 28ஆம் திகதி, வியாழக்கிழமை பிற்பகல் 2மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தலைமையிலும், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக் கட்சி கிளையின் ஆதரவிலும் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் யாழ்மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். கௌரவ. சிவஞானம் சிறிதரன் அவர்கள் “மறந்தாலும் மண்ணும் இரையாகும்” எனும் தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றவுள்ளார்.

சிறப்பு கவிஞரங்கம் “வாழ்வை நோக்கி,,,,,!” தலைமைக்கவிஞர் அரசையூர் மேரா தலைமையில் அரங்க கவிஞர்களான,

கவிஞர்: முருகு தயாநிதி

கவிஞர்: சொலையூரான் தனுஷ்கரன்

கவிஞர்: அழகு தனு

கவிஞர்: மேகராசா

கவிஞர் :செல்வி ந.தர்ஷினி

கவிஞர் :மயில் சூரியகுமாரன்

ஆகியயோர் கலந்து கவிதைமழை பொழியவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அதிதியாக கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்வில் கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர ஆலய குரு சிவஶ்ரீ வ.சோதிலிங்கம் குருக்களின் ஆசிஉரையினையும், பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் சி.புஷ்பலிங்கம் தொடக்கவுரையும், பொருலாளர் பி.நீதிதேவன் வரவேற்புரையும் மற்றும் செயலாளர் த.தியாகராசாவின் நன்றியுரையும் இடம்பெறும்.

உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவுத்தீபம் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வருடாவரும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக் கட்சி கிளையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அன்றைய தினம் பட்டிப்பளை பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் விஷேட பூஜைகள் இடம்பெறவுள்ளதாகவும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளர் த.தியாகராசா தெரிவித்தார்.

SHARE