கொஞ்ச நாட்களுக்கு முன்பு கொப்பியோடு நாமல் அண்ணா வந்தார். அவரது படத்தைப் பொறித்த கொப்பிகளைத்தந்தார். இப்பொழுது சிறையிருக்கிறார். காரணம் என்ன?

294
 namal

கொஞ்ச நாட்களுக்கு முன்பு கொப்பியோடு நாமல் அண்ணா வந்தார். அவரது படத்தைப் பொறித்த கொப்பிகளைத்தந்தார். இப்பொழுது சிறையிருக்கிறார். அவர் சிறையிருக்க காரணம் என்ன? பொதுச் சொத்துக்களை சூறையாடியமையே என வடக்கு மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பளைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தாவில் கிராமத்து பள்ளிப்பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குகின்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரித்தானியாவில் இருந்து விடுமுறைக்காக தாயகத்திற்கு வந்திருந்த கஜேந்திரன் என்பவரது திருமண நினைவு நாளை முன்னிட்டு அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பியாசக்கொப்பிகளை வழங்கி கல்வி அமைச்சர் உரை நிகழ்த்துகையில்,

இன்று கற்கின்ற பிள்ளைகள் ஒரு இலக்கை அடிப்படையாகக் கொண்டு கற்கிறார்கள். இவ்வாறு கற்பவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு போகலாம். பட்டங்களைப்பெறலாம். மீள சமூகத்திற்கு அவர்கள் வருகின்ற போது சமூகக்கோலங்கள் எவ்வாறு இருக்கின்றது என்பது முக்கியமானது.

இன்று பல மறைமுகத்தூண்டல்கள் காரணமாக மாணவர்களுடைய செயற்பாடுகளிலே மாற்றங்கள் தென்படுகிறது. ஆகவே பிள்ளைகளுக்கு நல்லவற்றை உண்மைகளைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். நல்லவர்களை முன்னுதாரணம் காட்டவேண்டும்.

இங்கே வந்திருக்கின்ற கஜேந்திரன் தனது திருமண நாளை இவ்வாறு கொண்டாட வேண்டும் என்று எண்ணியது முன்மாதிரியான நடத்தை. இவ்வாறான இளைஞர்கள் எங்களுடைய சிறியவர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டியது அவசியம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு கொப்பியோடு நாமல் அண்ணா வந்தார். அவரது படத்தைப் பொறித்து கொப்பிகளைத்தந்தார். இப்பொழுது சிறையிருக்கிறார். ஏன் சிறைக்குப்போனார்? பொதுச்சொத்துக்களைச் சூறையாடி தாங்கள் எடுத்துக் கொண்டு சில கொப்பிகளை மட்டும் எங்களுடைய பிள்ளைகளுக்குக் காட்டினார்.

ஆனால் இங்கு கஜேந்திரன் புலம்பெயர்ந்த மண்ணில் தான் உழைத்த உழைப்பின் ஒரு பகுதியை உங்களுக்குத் தருகிறார். ஆகவே முன்மாதிரியான இளைஞன் இங்கே யார்?

புலம்பெயர்ந்தபோதும் தன் தாய் மண்ணை நேசித்து பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவுகின்ற இவரைப் போன்றவர்களின் முன்மாதிரியான செயல்களே எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமானது என்றார்.

இத்தாவில் வட்டார அமைப்பாளர் அம்மாசி இராசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச அமைப்பாளர் கஜன், கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சுரேன், கட்சி செயற்பாட்டாளர் வீரா, கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் வேழமாலிகிதன், கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச்சங்க நிர்வாகிகள் நிதி அனுசரணையாளர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SHARE