மாத்தளை சித்தாங்கட்டி முருகபெருமான் ஆலய கொடியேற்றம் மிக சிறப்பாக நேற்று (20) நடைபெற்றது.
இதனை தெடர்ந்து ஆலயத்தில் மூன்று நாட்கள் அலங்கார திருவிழா இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இன்று (21) ஆலயத்தில் விஷேட பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்கார திருவிழாவை முன்னிட்டு சுவாமி உள்வீதி வலம் வருதல் நடைபெறவுள்ளது.
மாத்தளை சித்தாங்கட்டி அலங்கார திருவிழா நாளை (22) தீர்த்ததுடன் இனிதே நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.