கொடூரமாக மிருக வேட்டையில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுதலை

245

கொடூரமான முறையில் மிருக வேட்டையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், இணையங்கள் மற்றும் செய்திகள் ஊடாக பரபரப்பாக பேசப்பட்ட 6 வேட்டைக்காரர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை 25,000 ரூபாய் ரொக்க பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும், தெல்தெனிய மாவட்ட நீதவான் என்.எம்.பரீக்டீன் இன்று விடுதலை செய்துள்ளார்.

சந்தேகநபர்கள் பல வருடங்களாக நக்கீல்ஸ் வனப்பகுதியில் வேட்டையாடி வந்திருந்ததுடன், மிகவும் அபூர்வமான மிருகங்களை வேட்டையாடி அதனை பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றியும் மகிழ்ந்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3ம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

SHARE