பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளவுயர்வு இழுபறியானது பொருளாதாரம் .கல்வி .சமூக சீர்கேடுகளை தோற்றுவித்துள்ளதாகவும் சம்பள பிரச்சினை ஜனாதிபதி உடணடியாக தீர்த்து வைக்கவேண்டும் என சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தனர் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை நீண்டகாலமாக இழுபரீயில் காணப்படுகின்ற நிலையில் உடனடியாக பேச்சுவார்த்தையினூடாக இனக்கப்பாடான சம்பள தொகையை பெற்றுகொடுக்க ஜனாதிபதி தலையிடவேண்டி கொட்டகலையில் 19.07.2016 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவணயீர்ப்பு அமைதி விழிப்பூட்டல் ஆர்பாட்டத்தில் கலந்துகொணடவர்களே இவ்வாறு தெரிவித்தனர்
சர்வோதய அமைப்பின் தேசிய தேசோய சபையின் ஊடாக நாட்டின் 24 மாவட்டங்களிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இணங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுகொடுக்கின்றது அந்தவகையில் மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு அர்பாட்டத்தில் 25 சிவில் அமைப்புகள் இணைந்துகொண்டனர்
கொட்டகலை வினாயகர்!ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டினையடுத்து கொட்டகலை நகரசந்தியில் பதாதைகளுடன் கவணயீர்ப்பு போராட்டதை ஆரம்பித்தனர்
அயிரம் ரூபாய் சம்பளம் என்ற நிர்ணய தொகையை நிராகரித்து பேச்சுவார்த்தையினூடாக ஒரு இணக்கப்பாட்டு தொகையை பெற்றுகொடுத்து சம்பள உயர்வு பிரச்சினையை உடனடியாக தீர்க்க தொழிற்சங்கங்களூம் முதலாளிமார் சம்மேளனமும் முன்வரவேண்டும் சம்பள உயர்வு இன்றி தொழிலாளர் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளதுடன் பிள்ளைகளின் கல்வி நிலை பாதிப்படைந்துள்ளது தோட்டங்களில் வேலை செய்வோர் நகர்புரங்களுக்கு வெளியேறுகின்றனர் இந் நிலை தொடர்ந்தால் தேயிலை தொழில்துறை வீழ்சியடைந்து நாட்டின் தேசிய வருவாயும் பாதிப்படையும் அத்தோடு குடும்பத்தலைவன் தொழில் நிமித்தம் வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்வதால் சமூக சீராழிவுகள் சிறுவர் துஸ்பிரயோகங்களூம் அதிகரிக்கின்றது சம்பள பிரச்சினை பேச்சுவார்த்தைக்கு சிவில் அமைப்புகள் தயாராக உள்ளோம் தொழிற்சங்க சுயநலனுக்காக சம்மள பிரச்சினையை இழுத்தடிக்கப்படுகின்றது ஆகவே ஜனாதீபதி அவர்கள்பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வில் உடனடியாக தலையீடு செய்து தீர்த்து வைக்கவேண்டும் என்றனர் சம்பள பிரச்சிசை தொடர்பிலான இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரீவித்தனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்