கொட்டாதெனிய பாடசாலை மாணவர் பற்றி பொலிஸாரின் நிலைப்பாடு என்ன?

623
கெட்டாதெனிய சிறுமி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர் பற்றிய பொலிஸாரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறுமி கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த கொலையுடன் மாணவருக்கு தொடர்பு உண்டா இல்லையா என்பதனை பொலிஸார் வெளிப்படுத்த வேண்டும்.

உயிரிழந்த சிறுமியின் கொலையாளிகளை தேடும் விசாரணைகளில் இறக்காத குழந்தையை இறக்க வைக்க முயற்சித்துள்ளனர்.

மாணவர் பற்றிய பல்வேறு தகவல்களை வெளியிட்டு, மாணவர் பற்றி சமூகத்தில் பிழையான எண்ணக்கருவினை உருவாக்கியுள்ளனர்.

பொலிஸாரின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை சேயா என்ற சிறுமி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் இன்று அறிவித்துள்ளனர்.

SHARE