கொத்து ரொட்டி உண்ட மாணவன் பலி

293

 

கொத்துரொட்டி விஷமானதால் 18 வயது பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்த சம்பவம் ஊரகஸ்மங்சந்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி இரவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகனென தெரிவிக்கப்படுகின்றது.

தனது மூத்த சகோதரன் வாங்கி வந்த கொத்துரொட்டியையே குறித்த மாணவன் உட்கொண்டுள்ளான்.

பின்னர் கல்வி நடவடிக்கைகளின் பின்னர் உறங்கச் சென்றுள்ளார். இதன்போதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்துரொட்டியில் அடங்கியிருந்த அதிகப்படியான ஈஸ்ட் மற்றும் இராசயன ங்களே மரணத்துக்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

SHARE