கொத்மலை பேரூந்து நிலையத்தில் நடப்பது.. நடந்தவை…

188

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட தவலங்தன்னை நகரத்தில் காணப்படும் பேரூந்து நிலையத்தின் பகுதிகள் கழற்றி அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேரூந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், செல்லும் பேரூந்துகள் நிறுத்தப்படுகின்ற நிலையில், இதனை நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த பேரூந்து நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவரினால் கடை தொகுதி ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த கடைதொகுதி அமைக்கபட்டதினால் பேரூந்து நிலையத்தை பாவிக்கும் பயணிகளுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதுடன் பேரூந்து நிலையத்தின் பாகங்கள் நாளுக்கு நாள் அப்புரப்படுத்தபட்டு வருகின்றது.

தேசிய போக்குவரத்து அதிகார சபையினால் பொருத்தபட்டிருந்த நிறுத்தப்படும் பஸ்களின் விபரம் தொடர்பான விளம்பர பலகை கழற்றபட்டுள்ளது. இந்த விளம்பர பலகை குறித்த இடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அப்புரப்படுத்தபட்டு தற்போது தொடர்பே இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டு எறியபட்டுள்ளது.

தற்போது பேரூந்து நிலையத்தின் கூரை, சுவர் உட்பட பாகங்களும் உடைக்கபட்டுள்ளது. தொடரும் நாட்களில் அவையம் அகற்றும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது. இந்நிலையில் இந்த பேரூந்து நிலையம் குறித்த இடத்தில் தொடர்ந்து முறையாக இயங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலைமை தொடர்பாக நுவரெலியா பாதை அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி சம்பத் அவர்களை தொடர்பு கொண்ட போது. இந்நிலைமை தனக்கு தெரியாது என்றும். உடனடியாக பொலிஸாருக்கு அறிவிப்பதுடன் தனது அதிகாரி ஒருவரை அனுப்பி நிலைமையை ஆராய்ந்து சிறந்த முடிவினை எடுப்பதாக கூறினார்.

மத்திய மாகாண தேசிய போக்குவரத்து அதிகார சபையின் நிரைவேற்று அதிகாரி அனுருத்த அவர்களை தொடர்பு கொண்ட போது. தனக்கும் இந்நிலை தெரியாது என்றும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக இந்த பேரூந்து நிலைய பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக தெரிவித்தார்.bus

bus1

SHARE