கார்த்தி, லக்ஷ்மி மேனன் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த திரைப்படம் கொம்பன். பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்த இத்திரைப்படம் வெற்றி பெற்றது. ஆனால் வெளிவந்த நான்கு மாதத்திற்கு பிறகு இது ஒரு கொலைச்சம்பவத்துக்கு காரணமாய் அமைந்துள்ளது.
மூன்று மாதத்திற்கு முன்பு மானாமதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுற்றுலாவிற்கு கொடைக்கானல் சென்றுள்ளனர். இதில் ராம்நாத் என்பவரும் பொன் முத்துராமலிங்கமும் அருகருகே அமர்ந்துள்ளனர்.
அப்போது வேனில் கொம்பன் படத்தை போட்டுள்ளனர். இதில் கார்த்தி நடித்த கதாபாத்திரம் யாருடைய ஜாதி என்பதில் வாக்குவாதம் நீடித்ததில் ராம்நாத், முத்துராமலிங்கத்தை அடித்ததாகவும், அதனால் முத்துராமலிங்கம் பழிவாங்க திட்டமிட்டதாகவும் தெரிகிறது.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு வந்தபோது ராம்நாத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த ராம்நாத் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
சாதாரண படத்தில் ஆரம்பித்த சண்டை கொலையில் முடிந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.