அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் உத்தரவை தொடர்ந்து கொரியா தீபகற்பத்தை நோக்கி போர்க்கப்பல் புறப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத பரிசோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
‘வட கொரியாவின் விவகாரத்தை தீர்க்க சீனா உதவவில்லை என்றால் அமெரிக்காவே தனியாக தீர்க்கும்’ என சில தினங்களுக்கு முன்னர் டிரம்ப் கூறியுள்ளார்.
‘தீபகற்ப பகுதியில் வட கொரியா மட்டுமே சர்ச்சைக்குரிய நாடாக இருக்கிறது. இந்நிலையில் ராணுவ தளவாடங்களை தயார் நிலையில் நிறுத்துவதற்காக Carl Vinson என்ற போர்க்கப்பல் புறப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளரான Dave Benham என்பவர் தெரிவித்துள்ளார்.
கொரியா தீபகற்பத்தை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல் புறப்பட்டுள்ளதை தொடர்ந்து சர்வதேச நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.