கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டால் இலங்கையர்களை காப்பாற்ற முயற்சி

210

வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையில் மோதல் ஏற்பட்டால் அங்கு வாழும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர்களின் விசேட கோரிக்கைகளுக்கமைய கொரிய தூதுவரினால் இது தொடர்பில் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

மோதல் நிலைமைகள் ஏற்பட்டால் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இலங்கையர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தூதுவர் ஊடாக அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கொரியாவில் மீன்பிடி பிரிவில் தொழில் வாய்ப்புகள், ஏனைய நாடுகளை விடவும் இலங்கைக்கு அதிகமாக கிடைத்துள்ளது.

அந்த தொழிலுக்காக செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு கொரிய காலநிலைக்கு பழகிக் கொள்ளும் வகையில் இலங்கையில் விசேட பயிற்சி வழங்குவதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

SHARE