கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ரகுல் ப்ரீத் சிங்

180

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ இதுகுறித்து சமூகவலைதளத்தில், எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

நான் நலமாக உள்ளேன். தொடர்ந்து ஓய்வில் உள்ளேன். விரைவில் படப்பிடிப்புக்கு திரும்புவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், என்னை சந்தித்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நன்றி, தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் கமல் உடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயன் உடன் அயலான் மற்றும் ஹிந்தியில் மே டே போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE