கொலன்னாவை குப்பைமலை பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதி முஹம்மத் நிஹார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் குறித்த குப்பை மலை அமைந்துள்ள பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்காக மேலதிக காணிகளை சுவீகரிப்பதற்கும் நீதிபதி தடை விதித்துள்ளார்.
குப்பை மலை காரணமாக அப்பகுதியில் உருவாகியிருக்கும் மீத்தேன் வாயுவின் அழுத்தம் குப்பை மலையில் பாரிய வெடிப்பொன்றை எந்நேரமும் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறான சம்பவம் ஏற்படும் பட்சத்தில் பாரிய உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து குப்பை மலை அமைந்துள்ள பிரதேசத்தை மேலும் விஸ்தரிப்பதற்கான கொழும்பு மாநகர சபையின் நடவடிக்கைகளுக்குத் தடைவிதித்த நீதிபதி, உடனடியாக குப்பை மலை தொடர்பில் நிரந்தரமான ஒரு தீர்வை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறும் கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.