தடைப்பட்டிருந்த கொலையுதிர் காலம் படத்தினது படப்பிடிப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இறுதிக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சில காரணங்களால் பணிகள் முழுமையடையாமல் தடைப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் விதமாக கொலையுதிர் காலம் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம்.
இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா, பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் படக்குழுவில் ஏற்பட்ட திடீர் பிரச்சினை காரணமாக இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் செம போத ஆகாதே படத்தை விநியோகம் செய்த எட்சட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.