கொல்கத்தா டெஸ்ட் நியூசிலாந்தை மிரள வைத்த இந்தியா

237

625-500-560-350-160-300-053-800-748-160-70-8

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 316 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இந்நிலையில் நேற்று 2வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது நியூசிலாந்து.

இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறடிக் கொண்டிருந்தது.

இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 128 ஓட்டங்களை எடுத்திருந்தது. வாட்லிங் (12), ஜெட்டன் படேல் (5) ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது புயல் வேகப்பந்துவீச்சில் நியூசிலாந்து அணியை மிரள வைத்தார். 10 ஓவர்கள் வீசிய அவர் 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இன்று 3வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியை மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி பதம் பார்க்க, அந்த அணி 204 ஓட்டங்களுக்கு சுருண்டது. முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

112 ஓட்டங்கள் முன்னிலையில் வலுவான நிலையில் இருக்கும் இந்தியா, தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

SHARE