இலங்கை முழுவதும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாலர்கள் பற்றிய விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இன்று மாலை சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதமரிடம் யாழ்.ஊடக அமையம் மற்றும் ஊடக சுதந்திர செயற்பாட்டு குழு பிரதிகளினால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் கடந்த காலத்தில் கொல்லப்பட்ட வடக்கு கிழக்கை சேர்ந்த 41 தமிழ் ஊடகவியளாலர்கள் மற்றும் 3 பெரும்பான்மை ஊடகவியளாலர்களுமாக 44 ஊடகவியாளர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.
அந்த மகஜரை பெற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதமர் ,
கடந்த ஆட்சி காலத்திலையே அநேகமான ஊடகவியளாலர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் கடத்தப்பட்டு காணாமல் போயும் உள்ளனர்.
தற்போது அவ்வாறான சூழல் இல்லை. கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியாளலர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாலர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.