கொள்ளையர்கள் விட்ட சிறு எழுத்துப்பிழை காரணமாக ஒரு பில்லியன் டொலர் பணம் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இணையம் வழியாக திருட்டு நடத்தும் கும்பல் ஒன்று கடந்த மாதம் வங்கதேச தேசிய வங்கி மற்றும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் ஆகியவற்றில் கைவரிசையை காட்டியுள்ளனர்.
வங்கதேச தேசிய வங்கியின் இணைய பாதுகாப்பு அம்சங்களை முறியடித்த கொள்ளையர்கள் பண பரிவர்த்தனைக்கு தேவையான தகவல்களை திருடியுள்ளனர். இதனையடுத்து நியூயார்க் பெடரல் ரிசர்வின் இணையத்தில் நுழைந்து சட்டவிரோதமாக 30-க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனை வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் பிலிப்பைன்ஸ் நிறுவனத்தினர் சிலரது கணக்கில் இருந்து நான்கு தடவையாக 81 மில்லியன் டொலர்கள் பண பரிவர்த்தனை வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையடுத்து 5-வது முறையாக இலங்கையின் ஷாலிகா அறக்கட்டளைக்கு சொந்தமான கணக்கில் இருந்து 20 மில்லியன் டொலர்களை பண பரிமாற்றம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த ஹேக்கர்ஸ் கும்பல் செய்த சிறு எழுத்துப்பிழை விட மொத்த பண பரிவர்த்தனைகளையும் சரி பார்க்கும் படி அதிகாரிகளை தூண்டியுள்ளது. ஷாலிகா அறக்கட்டளை என்பதற்கு பதிலாக ஹேக்கர்கள் Fandation என எழுத்துப்பிழை விட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் ஷாலிகா அறக்கட்டளை என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் வங்கியின் பட்டியலில் இல்லை என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனிடையே, திடீரென பெருந்தொகை பண பரிமாற்றத்திற்கான வேண்டுகோள் வந்ததை அடுத்து வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இணையம் வழி திருட்டு கும்பலின் மொத்த பரிவர்த்தனை வேண்டுகோளையும் நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஒரு பில்லியன் டொலர்கள் பணம் கொள்ளையர்கள் பிடியில் இருந்து தப்பியுள்ளது. |