கொழும்பில் கடும் வாகன நெரிசல்

258

கொழும்பில் இன்று காலை முதல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் பொரளை, பொரளை சுற்றுவட்டம், மருதானை, ஆமர் வீதி, பேஸ்லைன் வீதி, லிப்டன் சுற்றுவட்டம் உள்ளிட்ட  பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுகின்றது.

மேலும், பல பாதை மின் சமிஞ்ஞை விளக்குகளும் செயற்பாடற்ற நிலையில் காணப்படுவதால் வாகனங்கள் சரியான முறையில் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் எமது செய்திளாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அலுவலகம் செல்லும் ஊழியர்கள், வாகன சாரதிகள், பொது மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE