கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடுகள் சிலவற்றுக்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் நகை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐந்து பேர் கல்கிஸ்ஸ குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் 4 கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் இரண்டு, டெப் ஒன்றும், தங்க நகை மற்றும் நகை அடகு வைத்த பற்றுச் சீட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் பயன்படுத்தி பிளாஸ்டிக் துப்பாக்கிகள் மற்றும் இரும்பு கம்பிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தமிழர்கள் வாழும் வீடுகளை இலக்கு வைத்து இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளவத்தையிலும் பல்வேறு இடங்களில் பாரிய கொள்ளைச் சம்பங்களில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.