கொழும்பில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய மைத்திரி அப்ப கடை! பதிலடி நடவடிக்கையா?

205

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் அப்பம் மிகவும் பிரபல்யமடைந்த ஒன்றாகியுள்ளது.

மஹிந்த – மைத்திரி ஜனாதிபதி தேர்தலுக்காக பிரிவதற்கு முதல் நாள் அலரி மாளிகையில் அப்பம் சாப்பிட்டமையே இதற்கு காரணமாகும்.

மைத்திரி – மஹிந்த தற்போது இணைந்த போதிலும் அப்பத்தின் ஆர்வம் இன்னமும் குறையவில்லை.

இந்த நிலையில் அலரி மாளிகையில் “மைத்திரி அப்ப கடை” ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையை விட்டு செல்லாத ரணிலுக்காகவும், அங்கு கூடும் உறுப்பினர்களுக்காகவும் அப்பம் சுடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அலரி மாளிகையில் தங்கியியுள்ளனர்.

இந்நிலையில் அதிரடியாக செயற்பட்ட ஜனாதிபதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு அப்ப கடை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE