கொழும்பில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் ஐந்து வாகனங்கள் வரை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கத்திற்கு அண்மையில் இவ்வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி சமிஞ்ஞையின் பிரகாரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த வீதியூடாக பயணித்த வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதியதையடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக சுமார் ஐந்து வாகனங்கள் வரை சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.