கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலைகளை குறிவைத்து நடக்கும் மோசமான செயற்பாடு

148

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலைகளை குறிவைத்து மிக மோசமான செயற்பாடு நடந்து வருகின்றமை ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் அனில் சமரநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலைகளை மையப்படுத்தி போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

இதற்காக போதைப்பொருள் வர்த்தகர்கள் பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்களை இவ்வாறானவர்களிடமிருந்து காக்கும் பொருட்டு விரைவில் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
SHARE