
கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் 15ம் திகதி இது தொடர்பில் விசேட தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
கொழும்பில் நடைபெறவுள்ள போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கைகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போதைப் பொருள் இல்லாதொழிப்பு குறித்த நடவடிக்கைகள் ஒரு மாத காலத்தின் பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.