கொழும்பில் லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது

95

 

ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்வதாக லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டு மோசடி செய்த குற்றச் செயல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
சந்தேகநபர் பன்னிபிட்டிய, ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடையவர் ஆவார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE