கொழும்பில் வாகன நெரிசலில் சிக்கிய இரு அம்பியூலன்ஸ்! போராடும் உயிருக்கு வழிவிடுங்கள்!

220

மருதானையிலிருந்து பொரளை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் மாட்டிக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அவசர ஒலியை எழுப்பிக்கொண்டு முந்தி செல்ல முற்பட்ட போதும் எந்த வாகனங்களும் அதற்கு இடம்கொடுக்க தயாராக இல்லை எனவும் கூறினார்.

“உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பவர்களை காவிச் செல்லும் வண்டிகளுக்கு இடம்கொடுக்க வேண்டும்” என்பது ஒவ்வொரு சாரதியினதும் கடமையாகும்.

ஆனால் வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது, மற்றைய வண்டிகளை முந்திச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் சில சாரதிகளால் ஒட்டுமொத்த சாரதிகளுக்கும் கொட்டபெயர் ஏற்படுகின்றது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1

சாரதிகளே இது உங்கள் கவனத்திற்கு!

அந்த அம்பியூலன்ஸ் வண்டியில் செல்பவர்கள் உங்களுடைய உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது தெரிந்தவர்களாகவோ கூட இருந்தால் இவ்வாறுதான் செயற்படுவீர்களா? அனைவரையும் அனைத்து உயிரையும் நேசியுங்கள்.

625-0-560-320-160-600-053-800-668-160-90

உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள் என்பது அனைவரதும் வேண்டுகோளாகும்.

SHARE