மாணவர்களின் தாக்குதல் காரணமாக கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே பாடசாலையின் மாணவ தலைவர்கள் சிலர் உட்பட 40 மாணவர்கள் இணைந்து நேற்று மாலை இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரக்பி போட்டியின் இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்துள்ளதாக கூறியே குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்ற பின் குறித்த மாணவன் வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளார். எனினும் மீண்டும் நேற்று மாலை ஆபத்தான நிலைக்கு உள்ளானமையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர கிசிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.