கொழும்பு அட்டன் வீதியின் செனன் சந்தியில் ரயர்களை எரித்து பாரிய ஆர்ப்பாட்டம்

229

கொழும்பு அட்டன் வீதியின் செனன் சந்தியில் ரயர்களை எரித்துப் பாரிய ஆர்ப்பாட்டம்
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக்கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் பத்தாவது நாளாக 05.10.2016 அதாவது இன்றும் ஈடுபட்டுள்ளனர்.

செனன் தேயிலைச் தொழிற்சாலைக்கருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் செனன் குயில்வத்தை, வட்டவளை பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீதியில் ரயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றமையினால் கொழும்பு, கண்டி, அட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்து இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழியுறுத்தியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-1

unnamed-2

unnamed-3

unnamed

SHARE