கொழும்பு அருகே கஹதுடுவ பிரதேசத்தில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

111

 

கஹதுடுவ பிரதேசத்தில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து கஹதுடுவை- ரிலாவல பிரதேசத்தில் நேற்று(24.02.2024) பிற்பகல் நடைபெற்றுள்ளது.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை
மோட்டார் சைக்கிளொன்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE